முகவுரை

ஜேர்மனியின் உதவியுடன் பாரம்ரிய தொழில்நுணுக்க பயிற்சி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 1960ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனமானது ஆரம்பத்திலிருந்தே இலங்கையின் கைத்தொழில்துறைக்கு திறமைமிக்க தொழிலாளர்களை வழங்கும் பிரதான நிறுவகமாக விளங்கியது. எவ்வாறாயினும் கடந்த மூன்று தசாப்தங்களில் ஏற்பட்ட விரைவான உயர்தர தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வேகமாக உயர்நிலையினை அடையும் இலங்கையின் உற்பத்தித்துறைக்கு ஏற்றவகையில் இ.ஜே.தொ.ப.நிறுவகத்தின் பயிற்சிக்கான வசதிகளை தரமுயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த தொழில்நுணுக்கத்தில் திறமையுள்ளோர்களின் தட்டுப்பாடு காரணமாக முதலீட்டு சபையில் (BOI) வெளிநாட்டு முதலீடுகள் முடக்கமடையும் நிலை ஏற்பட்டது.

உயர்தர தொழில்நுணுக்கங்களில் பயிற்சியினை விரிவுபடுத்துவதற்காக ஜேர்மன் சமஷ்டி குடியரசிற்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையே 22 பெப்ரவரி 2001 இல் செய்து கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்படிக்கைக்கு அமைய 20 ஒப்டோபர் 2004 இல் இ.ஜே.தொ.ப.நி வளாகத்தினுள் நவீன தொழில்நுணுக்க பயிற்சி மையம் தாபிக்கப்பட்டது.

இலக்கு

உயர் உற்பத்தி, ஆற்றல், வினைத்திறன், நுணுக்கம் ஆகியவைகளை பெற்றுக்கொள்வதற்காக கணனி எண்சார் கட்டுப்பாட்டுடன் (CNC) கூடிய துல்லிய பொறியியற்றுறையில் தனியார் கைத்தொழில்களினதும் பொதுமக்களினதும் ஒத்துழைப்புடன் தொழில்நுட்பவியலாளர்களை பயிற்றுவித்தல்.

விளைவு

  • காணப்படும் கைத்தொழிற்றுறையின் முன்னேற்றம், உற்பத்தித்திறன், வினைத்திறன் மற்றும் நுணுக்கம்.
  • CNC யில் பயிற்றுவிக்கப்பட்ட தொழில்நுட்பவியலாளர்களாக இலங்கை முதலீட்டுச் சபை கருத்திட்டத்தில் அதிக தொழில் முயற்சியாளர்கள் முதலீடு செய்தல்.
  • CNC தொழில்நுட்பத்தில் உயர்தகைமை வாய்ந்த இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயர் சம்பளத்துடன்கூடிய தொழில்களை பெற்றுக்கொள்வதுடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் துணையாகவிருப்பார்கள்.

ந.தொ.ப.மை இல் காணப்படும் இயந்திர உபகரணங்கள்

  • CNC மில்லிங்கு இயந்திரங்கள்
  • CNC கடைச்சல் இயந்திரங்கள்
  • CNC மின் இறக்கல் இயந்திரங்கள் (EDM)
  • உயர்துல்லிய றேபரப்பு சாணைபிடித்தல் இயந்திரங்கள்
  • கணனி உதவியுடன் வடிவமைத்தலும் கணனி உதவியுடன் உற்பத்தியும்(CAD/CAM)

ந.தொ.ப.மை நடாத்தும் பயிற்சிநெறிகள்

{slider கணனி எண்சார் கட்டுப்பாடு (CNC)|closed}

இலக்கு குழு: தொழிசார் பயிற்சி நிறுவனங்களின் மாணவர்களும் போதனாசிரியர்கள், CNC தொழிலாளர்கள், ஆயுத இயந்திரவியற்றுறையிலுள்ள மேற்பார்வையாளர்களும் பல்கலைகழக மாணவர்களும்.

கற்கைநெறி காலம் கற்கைநெறி கட்டணம்
CNC மில்லிங்கு அறிமுகம் 25 மணித்தியாலம்
(3 வாரநாட்கள் / 3 சனிக்கிழமைகள்)
ரூ. 5000/=
CNC மில்லிங்கு (பகுதி 1) 50 மணித்தியாலம்
(7 வாரநாட்கள் / 7 சனிக்கிழமைகள்)
ரூ. 10500/=
CNC மில்லிங்கு (பகுதி 2) 50 மணித்தியாலம்
(7 வாரநாட்கள் / 7 சனிக்கிழமைகள்)
ரூ. 10500/=
CNC கடைச்சல் அறிமுகம் 25 மணித்தியாலம்
(3 வாரநாட்கள் / 3 சனிக்கிழமைகள்)
ரூ. 5000/=
CNC கடைச்சல் 50 மணித்தியாலம்
(7 வாரநாட்கள் / 7 சனிக்கிழமைகள்)
ரூ. 10500/=
CNC EDM 50 மணித்தியாலம்
(7 வாரநாட்கள் / 7 சனிக்கிழமைகள்)
ரூ. 10500/=

{slider கணனி உதவியுடன் வடிவமைத்தலும் கணனி உதவியுடன் உற்பத்தியும் (CAD/CAM)}

இலக்குக்குழு: தொழிசார் பயிற்சி நிறுவனங்களின் மாணவர்களும் போதனாசிரியர்களும், இயந்திவியல் குடிசார் படவரைஞர்கள் மற்றும் பல்கலைகழக மாணவர்கள்

கற்கைநெறி காலம் கற்கைநெறி கட்டணம்
Auto CAD 2D & 3D Modeling (Auto CAD R 2010) இயந்திரவியல், குடிசார்வியல், மின்சாரவியல் மற்றும் இலத்திரனியல் 150 மணித்தியாலம்
(19 சனிக்கிழமைகள் or 21 புதன்கிழமைகள்)
ரூ. 22,000/=
நவீன தொழில்நுட்ப பயிற்சி நிலையம்
இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம்
582, காலி வீதி,
கல்கசை (மொரட்டுவ)
இலங்கை
தொலைபேசி : +94-11-2638686
தொலைநகல் : +94-11-2638686
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
FaLang translation system by Faboba