உற்பத்தி / திருத்தம்

இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தினால் பொதுமக்களுக்கும் தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்கும் நியாயமான கட்டணத்தினை அறவிட்டு பின்வருவன தொடர்பான உற்பத்திகள் மற்றும் சேவைகள் என்பன பெற்றுக்கொடுக்கப்படுகின்றது.

  • வாகனம் பழுதுபார்த்தல்
  • வாகனம் சேவை செய்தல்
  • சில்லு நேர்வரிசையாக்கல்
  • எஞ்சின் சீராக்கல்
  • எஞசின் பரீட்சித்தல்
  • டீசல் எரிபொருள் பம்பி பழுதுபார்த்தலும், பரீட்சித்தலும்
  • இயந்திர வேலை
  • காய்ச்சியிணைத்தல் வேலை
  • மின்சார வீட்டு உபகரணங்கள், குளிர்சாதனப்பெட்டி, காற்றுபதமாக்கி பழுதுபார்த்தல்

வாகன தகைமைச் சான்றிதழ்

இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனமானது இலங்கையில் கணரக வாகனங்கள் மற்றும் இலகுதர வாகனங்கள் என்பவற்றுக்கான தகைமைச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.

மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக இங்கு இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்புத் தகவல்களுக்கு ஏற்ப தயாரிப்பு மற்றும் பராமரிப்பு பிரதான பொறியியலாளருடன் தொடர்பு கொள்ளவும்.

தொழில்சார் பரிசோதனைகளை நடாத்துதல்.

இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்குத் தேவையான தொழில்சார் பரிசோதனைகளை மேற்கொண்டு ஆலோசனை சேவைகளைப் பெற்றுக்கொடுத்தல்.

மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக இங்கு இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்புத் தகவல்களுக்கு ஏற்ப பிரதான பயிற்சி பொறியியலாளருடன் தொடர்பு கொள்ளவும்.