இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்திற்கும் (CGTTI) ஜேர்மனியிலுள்ள கேபிற் சூள் மெற்சிக்கன் (GSM) ஆகியவற்றிற்கும் இடையிலான கூட்டுறவு

பங்காளி நிறுவகத்தின் அனுசரணையின் மூலம் 1985 ம் ஆண்டிலிருந்து படன்-வூடெம்பேர்க் மானில அரசினால் 140,000 DM இற்கும் கூடுதலான நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி இயந்திரங்கள், கற்பித்தல் உபகரணங்கள், விஷேட விரிவுரைகள் மற்றும் இலங்கையர், ஜேர்மனிய பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோர்களுக்கான பிரயாணச்செலவு போன்றவைகளுக்காக ஒதுக்கப்பட்டன. எல்லா கற்பித்தல் நடவடிக்கைகளும் ஊதியமின்றி ஜேர்மன் கல்லூரி விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டன.

அனுசரணை: கல்வி அமைச்சு  படன்-வூடெம்பேர்க், ஜேர்மனி.

செயற்பாடுகள்:

 • பாடவிதான மொழிபெயர்ப்பும் பரிமாற்றலும், பரீட்சை வினாப்பத்திரங்கள், தொழில்நுட்ப விரிவுரைகள் போன்றவைகள்.
 • தொழில்நுட்ப மற்றும் போதனை துறைகளுக்கான ஆலோசனைகள்
 • செயற்திட்ட – உற்பத்தி ஊக்கமளிப்பு சம்பந்மான விடயங்களில் பயிற்சி
 • பின்வரும் தொழிற்றுறைகளுக்கான தொழில்நுட்ப பரிமாற்றம்
  • தன்னியக்க பொறியியல் தொழில்நுட்பம்
  • பராமரிப்பும் திருத்தமும்
  • உற்பத்தி பொறியியல்
  • நவீன போதனை முறைக்கான ஆசிரிய பயிற்சி
  • PLC மற்றும் CNC தொழில்நுட்பம்

1985 ஆண்டிற்கு பின்னரான செயற்பாட்டின் பின்நோக்கல்

2010

CGTTI இன் 50 ஆண்டு பூர்த்தி விழாவினை நடாத்துதல்

இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் 50 ஆண்டு பூர்த்தி விழாவினை நடாத்துதல். இதில் மெட்சிங்ஹம் மற்றும் ஜேர்மனி கல்வி அமைச்சின் பிரதிநிதிக் குழுவொன்று கலந்துகொள்ளல்.

பணிப்பாளர் / தலைவர் எஸ். மஞ்சநாயக்க அவர்கள் ஜேர்மனியின் முன்னாள் பணிப்பாளர் டைடர் துண்மன் அவர்களது பிரியாவிடை வைபவத்தில் கலந்து கொள்வதற்காக மெட்சிங்ஹம் நகருக்கு புறப்படல்.

மெட்சிங்ஹம் Gewerbliche Scheule Metzingem இல் புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் றொலன்ட் கெய்சல் அவர்கள் மற்றும் ஜேர்மன் நாட்டின் Baden-wuerttemberg மாநிலத்தின் அரச உத்தியோகத்தர்களுடன் பங்குடமையின் எதிர்கால நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடல்.
2009

CGTTI இன் இரண்டு அதிகாரிகள் மெட்சிங்ஹமில் நடைபெற்ற இருவார பயிற்சி செயலமர்வில் கலந்து கொள்ளல்

இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் இரண்டு அதிகாரிகள் மெட்சிங்ஹமில் நடைபெற்ற இருவார பயிற்சி செயலமர்வில் கலந்து கொள்ளல். (இச்செயலமர்வு திட்டமிடல், செயலமர்வு உபகரணங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பானது) பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் நூதனசாலை என்பவற்றினையும் இதன்போது பார்வையிட்டனர்.
2008

இரண்டு வார கற்கைநெறிகளில் CGTTI ஐ சேர்ந்த நான்கு போதனாசிரியர்கள் கலந்து கொண்டனர்

மட்டம் ஐந்திற்கான (Master Craftsman) பாடவிதான அபிவிருத்தி பயிற்சிப் பட்டறை GSM இல் இருந்து வருகை தந்த ஆசிரியர்களினால் CGTTI இல் இரண்டு வாரம் நடத்தப்பட்டது.

தன்னியக்க பொறியியல், வலு மின்சாரவியல் மற்றும் வலையமைப்பு நிர்வாகம் ஆகிய இரண்டு வார கற்கைநெறிகளில் CGTTI ஐ சேர்ந்த நான்கு போதனாசிரியர்கள் GS மெற்சிங்கன், ரெயூற்லிஞ்ஜென் ஆகய இடங்களில் கலந்து கொண்டனர்.
2007

CGTTI இலிருந்து இரண்டு போதனாசிரியர்கள் இரண்டு வாரகால கற்கைநெறிக்காக GS மெற்சிங்கனிற்கு சென்றிருந்தனர்

CGTTI இலிருந்து இரண்டு போதனாசிரியர்கள் தன்னியக்க பொறியியல் வல்லுனர் (Master Craftsman) பாடவிதானம் தயாரிப்பதற்கான இரண்டு வாரகால கற்கைநெறிக்காக GS மெற்சிங்கனிற்கு சென்றிருந்தனர்.

மோட்டார் முகாமைத்துவம் மற்றும் தன்னியக்க பொறியியல் நவீன பாடவிதான அபிவிருத்திக்கான (முதலாம் வருடம்) இரண்டு வார கற்கை நெறியில் CGTTI ஐ சேர்ந்த இரண்டு போதனாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
2006

பங்காளித்துவத்தின் 20 வருட நிறைவு கொண்டாடப்பட்டது

பங்காளித்துவத்தின் 20 வருட நிறைவு கொண்டாடப்பட்டது. ஜேர்மனி, படன்-வூடெம்பேர்க் மானிலத்தின் கல்வி அமைச்சிலிருந்து பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். பங்காளித்துவ கூட்டுறவு அபிவிருத்திக்காக ஐந்து வருட திட்டம் வகுக்கப்பட்டது. Five year plan for the development of the partnership co-operation.
2005

நிவாரண நடவடிக்கை றோலன்ட் மற்றும் கிறேற் கில்குஸ் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டது

சுனாமியினால் பாதிக்கப்பட்ட CGTTI ஐ சேர்ந்த 19 பேர்களுக்கான நிவாரண நடவடிக்கை றோலன்ட் மற்றும் கிறேற் கில்குஸ் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக 70,000 யூரோ செலவிடப்பட்டது.
2004

இயக்குனர்/அதிபர் திரு.காமினி.எஸ்.மஞ்சநாயக்க அவர்கள் கெபிளிச் சூல் மெற்சிங்கன் ஜேர்மனிக்கு சமுகமளித்திருந்தார்

பங்காளர் கூட்டுறவினை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்வதற்கான கலந்துரையாடலுக்காக கெபிளிச் சூல் மெற்சிங்கன் இயக்குனர் திரு. டையிற்ரர் கூன் அவர்களினதும் ஜேர்மனி, படன்-வூடெம்பேர்க் மானில அரசினதும் அழைப்பினை ஏற்று இயக்குனர்/அதிபர் திரு.காமினி.எஸ்.மஞ்சநாயக்க அவர்கள் கெபிளிச் சூல் மெற்சிங்கன் ஜேர்மனிக்கு 02.05.2003 இலிருந்து 18.05.2003 வரை சமுகமளித்திருந்தார்.

பாடவிதானம் மற்றும் CNC தொழில்நுட்பத்திற்கான வேலை திட்ட நூல் தயாரித்தல் விடயமான பயிற்சிப் பட்டறை கெபிளிச் சூல் மெற்சிங்கன் ஜேர்மனியிலிருந்து வருகை தந்த நிபுணரான திரு.கொட்லெப் ஹான் அவர்களினால் திருப்திகரமாக நடத்தப்பட்டது. 19.08.2004 இலிருந்து 30.08.2004 வரை நடைபெற்ற இப்பட்டறையில் CGTTI ஐ சேர்ந்த ஆறு கற்பித்தல் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

நவீன தொழிற்றுறை பயிற்சி மையம் இலங்கை பிரதம மந்திரி கௌரவ. மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
2003

CNC கடைச்சல், மற்றும் தன்னியக்க பொறியியல் இலத்திரனியல் சம்பந்தமான பயிற்சி

CNC கடைச்சல், மற்றும் தன்னியக்க பொறியியல் இலத்திரனியல் சம்பந்தமாக 04.10.2003 இலிருந்து 18.10.2003 வரை கெபிளிச் சூல் மெற்சிங்கனில் நடைபெற்ற பயிற்சியில் CGTTI யிலிருந்து இரண்டு போதனாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
2002

இரண்டு வார CNC கடைச்சல் இயந்திர பயிற்சிப் பட்டறை

இரண்டு வார CNC கடைச்சல் இயந்திர பயிற்சிப் பட்டறை GS மெற்சிங்கனிலிருந்து வருகை தந்த இரண்டு நிபுணர்களினால் நடத்தப்பட்டது.

கெபிளிச் சூல் மெற்சிங்கன் இயக்குனர் பதவியினை ஏற்றபின் திரு. டையிற்ரர் கூன் அவர்களும் திருமதி. கூன் அவர்களும் முதன்முறையாக CGTTI இற்கு 20.05.2002 அன்று வருகை தந்தமை. மேற்கூறப்பட்ட பயிற்சி பட்டறை தொடர்புபட்டதாக இது அமைந்திருந்தது.
2001

கட்டுப்பாட்டு தொழில்நுட்ப ஒரு வார பயிற்சிப் பட்டறை

கட்டுப்பாட்டு தொழில்நுட்ப ஒரு வார பயிற்சிப் பட்டறை GS மெற்சிங்கனிலிருந்து வருகை தந்த இரண்டு நிபுணர்களினால் நடத்தப்பட்டது.
2000

GS மெற்சிங்கனில் CGTTI போதனாசிரியர்களுக்கு மூன்று வாரகால பயிற்சி வழங்கியமை

மின் வாயுவியல்: பயிற்றுவித்தல் முறை, பாடசாலை முகாமைத்துவம் துறையில் GS மெற்சிங்கனில் CGTTI போதனாசிரியர்களுக்கு மூன்று வாரகால பயிற்சி வழங்கியமை.
1999

GS மெற்சிங்கனிலிருந்து வருகை தந்த இரண்டு போதனாசிரியர்களினால் CGTTI இல் பயிற்சி வழங்கப்பட்டமை

நவீன வாகன உடல் திருத்த்துதல் மற்றும் காய்ச்சியிணைத்தல் தொழில்நுட்பத்தில் GS மெற்சிங்கனிலிருந்து வருகை தந்த இரண்டு போதனாசிரியர்களினால் CGTTI இல் பயிற்சி வழங்கப்பட்டமை.
1998

CGTTI இன் இரண்டு போதனாசிரியர்களுக்கு மென்சிங்கனில், மூன்று வாரம் பயிற்சி வழங்கியமை

CGTTI இன் இரண்டு போதனாசிரியர்களுக்கு மென்சிங்கனில், நவீன வாகன உடல் திருத்தல் மற்றும் கைத்தொழில் தையல் இயந்திரம் திருத்தலும் பராமரிப்பும் துறையில் மூன்று வாரம் பயிற்சி வழங்கியமை.
1997

GS மெற்சிங்கனிலிருந்து வருகை தந்த இரு ஆசிரியர்கள் பயிற்சி வழங்கியமை

சர்வதேச வலைப்பின்னல் அறிமுகம் மற்றும் CGTTI இற்கான இல்லப்பக்கத்தினை உருவாக்குதல் பற்றி GS மெற்சிங்கனிலிருந்து வருகை தந்த இரு ஆசிரியர்கள் பயிற்சி வழங்கியமை.
1997

புதிதாக நியமனம் பெற்ற இயக்குனர்/அதிபர் திரு.எஸ்.டயஸ் அவர்கள் மெற்சிங்கனிற்கு சமுகமளித்தமை

புதிதாக நியமனம் பெற்ற இயக்குனர்/அதிபர் திரு.எஸ்.டயஸ் அவர்கள் மெற்சிங்கனிற்கு சமுகமளித்தமை. நவீன கற்பித்தல் முறைக்கு பழக்கப்படுதல், கல்லூரி நிர்வாகம் மற்றும் கைத்தொழில் நிலையங்களை பார்வையிட்டமை.
1996

CGTTI இன் இரண்டு போதனாசிரியர்களுக்கு மெற்சிங்கனில் மூன்று வார பயிற்சி வழங்கியமை

கணனி அறிமுகத் திட்டத்திற்காக CGTTI இன் இரண்டு போதனாசிரியர்களுக்கு மெற்சிங்கனில் மூன்று வார பயிற்சி வழங்கியமை.
1995

மோட்டரோனிக் கட்டுப்பாட்டு எஞ்சின் சம்பந்தமாக CGTTI இல் பயிற்சி நடத்தியமை

மோட்டரோனிக் கட்டுப்பாட்டு எஞ்சின் சம்பந்தமாக CGTTI இல் பயிற்சி நடத்தியமை. எதிர்கால அபிவிருத்திகளும் CGTTI இன் நிதி அடிப்படையிலும் இரண்டு வார ZOPP பட்டறை நடத்தியமை.
1994

CGTTI இன் இரண்டு போதனாசிரியர்களுக்கு நவீன ஒடுக்கல் எந்திர தொழில்நுட்பத்தில் பயிற்சி வழங்கியமை

CGTTI இன் இரண்டு போதனாசிரியர்களுக்கு நவீன ஒடுக்கல் எந்திர தொழில்நுட்பத்தில் பயிற்சி வழங்கியமை. மோட்டரோனிக் கட்டுப்பாட்டு தொகுதி எஞ்சின்களை பல் வேறு பரீட்சைகளுக்கேற்ற வகையில் மாற்றியமைத்தமை.
1993

CGTTI இல் பயிற்சிப் பட்டறை

CNC மில்லிங், CNC மாதிரி திட்டத்திற்கான பட்டறை CGTTI இல் நடத்தப்பட்டமை.
1992

மெற்சிங்கன் இயக்குனர் முதன்முறையாக CGTTI இற்கு வருகை தந்தமை

கெபிளிச் சூல் மெற்சிங்கன் இயக்குனர் பதவியினை ஏற்றபின் திரு. டையிற்ரர் கூன் அவர்களும் திருமதி. கூன் அவர்களும் முதன்முறையாக CGTTI இற்கு 20.05.2002 அன்று வருகை தந்தமை. மேற்கூறப்பட்ட பயிற்சி பட்டறை தொடர்புபட்டதாக இது அமைந்திருந்தது.
1992

CNC தொழில்நுட்பத்தில் இரண்டு CGTTI போதனாசிரியர்களுக்கு நான்கு வார பயிற்சி வழங்கியமை

CNC தொழில்நுட்பத்தில் இரண்டு CGTTI போதனாசிரியர்களுக்கு நான்கு வார பயிற்சி வழங்கப்பட்டு CNC மில்லிங் இயந்திரம், CNC இன் மாதிரி திட்டத்தின் அறிமுகம்.
1991

CGTTI இல் பயிற்சிப் பட்டறை

பேருந்து, லொறிகளுக்கான வாயுத் தடுப்பு தொகுதி விடயமான பயிற்சி பட்டறை CGTTI இல் நடத்தப்பட்டமை.
1990

இரண்டு CGTTI போதனாசிரியர்களுக்கு நான்கு வார பயிற்சி அளிக்கப்பட்டமை

இரண்டு CGTTI போதனாசிரியர்களுக்கு வாயுத் தடுப்பு தொகுதியில் நான்கு வார பயிற்சி அளிக்கப்பட்டமை. வாயுத் தடுப்பின் பரீட்சை மாதிரி உருவாக்கப்பட்டமை.
1989/1990

CNC பயிற்சிபட்டறைக்கு 02 CGTTI போதனாசிரியர்கள் அழைக்கப்பட்டமை

GSM ஆசிரியர்களினால் இந்தியா, பெங்களூர் முகாரி பயிற்சி நிறுவகத்தில் நடத்தப்பட்ட ஆறு வார CNC பயிற்சிபட்டறைக்கு 02 CGTTI போதனாசிரியர்கள் அழைக்கப்பட்டமை.
1988

CGTTI இல் பயிற்சி பட்டறை நடத்தியமை

இலத்திரனியல் தொடக்கல், பெற்றோல் உட்செலுத்தி தொகுதியில் CGTTI இல் பயிற்சி பட்டறை நடத்தியமை.
1987

CGTTI இன் போதனாசிரியர்களுக்காக நான்கு வாரம் இரண்டு பட்டறைகள் நடத்தப்பட்டமை

CGTTI இன் போதனாசிரியர்களுக்காக அடைப்பு வில் காய்ச்சியிணைத்தலில் நான்கு வாரம் இரண்டு பட்டறைகள் நடத்தப்பட்டமை. அத்துடன் மூன்று வாகன எந்திரங்கள் பரீட்சிக்கப்பட்டு இயங்குவதற்கேற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டமை.
1986

நான்கு வாரங்கள் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டமை

இயந்திர ஆயுத பராமரிப்பும் திருத்தமும் விடயத்தில் போதனாசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை மெற்சிங்கனில் நான்கு வாரங்கள் நடத்தப்பட்டமை.
1986

CGTTI இயக்குனர்/அதிபர் மெற்சிங்கனிற்கு சமுகமளித்தமை

CGTTI இயக்குனர்/அதிபர், இ.ம.போ.சபையின் தலைவர் ஆகியோர் மெற்சிங்கனிற்கு சமுகமளித்தமை.
1986

CGTTI இல் பயிற்சிப் பட்டறை

CGTTI இல் வாயுவியல் நீரியல் கட்டுப்பாட்டு தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறை
1985

கேபிற் சூள் மெற்சிக்கன் (GSM) புதிய கட்டிட திறப்பு விழா

CGTTI இன் இயக்குனர்/அதிபர் திரு வி.எல்.சி.பெரேரா அவர்களின் மெற்சிங்கன் பயணம்
கேபிற் சூள் மெற்சிக்கன் (GSM) புதிய கட்டிட திறப்பு விழாவின் போது கல்லூரி பங்காளி தொடர்பு அதிகாரபூர்வமாக அறிக்கையிடப்பட்டமை.