பொரளை தொழிற்பயிற்சி நிலையமானது 1980 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அது 2007 ஆம் ஆண்டிலே இலங்கை – ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம், பொரளை எனும் பெயரில் மீளப்பெயரிடப்பட்டது. தனியார் துறையில் அதிக கிராக்கி காணப்படுகின்ற மோட்டார் வாகன பொருத்துதல் (Assemble) பற்றிய திருத்தம் மற்றும் வாகனங்களைப் பெயின்ட் பண்ணுதல் தொடர்பான பாடநெறி 2007 ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்டதுடன் முதன் முதலில் அதில் 15 பேர் கலந்து கொண்டனர். 2008 ஆம் ஆண்டிலே முழுநேர பாடநெறியினை பயிலுவதற்காக 14 பயிலுனர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இந்தப் பாடநெறியினை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு 4 மில்லியன் ரூபா செலவில் புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய வாகனங்கள் பெயினட் பண்ணுவது தொடர்பான நிலையம் ஒன்று நிறுவப்பட்டதுடன் கணினிமயப்படுத்தப்பட்ட பெயின்ட் கலவை இயந்திரம் ஒன்று இங்கு பொருத்தப்பட்டுள்ளது.

முழுநேர பாடநெறிகளுக்குப் புறம்பாக கட்டணம் செலுத்தி பயிலக்கூடிய பின்வரும் பாடநெறிகள் தற்போது நடாத்தப்படுகின்றன.

  • வாகனங்கள் டிங்கரிங் பண்ணுதல் - AT1 காலம் 150 மணித்தியாலங்கள்
  • வாகனங்களை பெயின்ட் பண்ணுதல் - AP1 காலம் 150 மணித்தியாலங்கள்
இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம்,
ருஹூனு கலா மாவத்தை,
பொரளை,
இலங்கை.
தொலைபேசி : +94-11-2695981
தொலைநகல் : +94-11-2695981