ஜேர்மன் பங்குடமை
இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்திற்கும் (CGTTI) ஜேர்மனியிலுள்ள கேபிற் சூள் மெற்சிக்கன் (GSM) ஆகியவற்றிற்கும் இடையிலான கூட்டுறவு
பங்காளி நிறுவகத்தின் அனுசரணையின் மூலம் 1985 ம் ஆண்டிலிருந்து படன்-வூடெம்பேர்க் மானில அரசினால் 140,000 DM இற்கும் கூடுதலான நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி இயந்திரங்கள், கற்பித்தல் உபகரணங்கள், விஷேட விரிவுரைகள் மற்றும் இலங்கையர், ஜேர்மனிய பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோர்களுக்கான பிரயாணச்செலவு போன்றவைகளுக்காக ஒதுக்கப்பட்டன. எல்லா கற்பித்தல் நடவடிக்கைகளும் ஊதியமின்றி ஜேர்மன் கல்லூரி விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டன.
அனுசரணை: கல்வி அமைச்சு படன்-வூடெம்பேர்க், ஜேர்மனி.
செயற்பாடுகள்:
- பாடவிதான மொழிபெயர்ப்பும் பரிமாற்றலும், பரீட்சை வினாப்பத்திரங்கள், தொழில்நுட்ப விரிவுரைகள் போன்றவைகள்.
- தொழில்நுட்ப மற்றும் போதனை துறைகளுக்கான ஆலோசனைகள்
- செயற்திட்ட – உற்பத்தி ஊக்கமளிப்பு சம்பந்மான விடயங்களில் பயிற்சி
- பின்வரும் தொழிற்றுறைகளுக்கான தொழில்நுட்ப பரிமாற்றம்
- தன்னியக்க பொறியியல் தொழில்நுட்பம்
- பராமரிப்பும் திருத்தமும்
- உற்பத்தி பொறியியல்
- நவீன போதனை முறைக்கான ஆசிரிய பயிற்சி
- PLC மற்றும் CNC தொழில்நுட்பம்